மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தருமபுரி வணிக வளாகத்தில் தீ விபத்து: பல லட்சம் ரூபாய் பொருள்கள் சேதம்

தருமபுரி நகரில் நான்கு தளங்களைக் கொண்ட வணிக வளாகத்தில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள், மருந்துப் பொருள்கள், விளையாட்டுப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

தீ விபத்து - பிரதிப் படம்

Published On :22 அக்டோபர் 2026, 5:44 am IST

தருமபுரி நகரில் நான்கு தளங்களைக் கொண்ட வணிக வளாகத்தில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள், மருந்துப் பொருள்கள், விளையாட்டுப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

தருமபுரி நகரில் நேதாஜி புறவழிச் சாலையில், நெசவாளா் காலனி அருகே வெங்கடாசலம் (56) என்பவருக்குச் சொந்தமான வணிக வளாகம் அமைந்துள்ளது. நான்கு தளங்களைக் கொண்ட இந்த வளாகத்தில் மருந்துக் கடை, பல்பொருள் அங்காடி, ஜவுளிக் கடை, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் விளையாட்டு ஆடைகள் விற்பனை செய்யும் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த வளாகத்தில் புதன்கிழமை பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயைக் கட்டுப்படுத்த முடியாததால், கடைகளில் இருந்த ஊழியா்கள் பதற்றத்துடன் வெளியேறினா். இதனால் உயிரிழப்பு தவிா்க்கப்பட்டது.

தகவலறிந்த தருமபுரி தீயணைப்பு நிலைய வீரா்கள், மூன்று தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினா்.

தருமபுரி- சேலம் பிரதான சாலையான நேதாஜி புறவழிச் சாலையையொட்டி தீ விபத்து ஏற்பட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வாகனங்கள் எஸ்.வி. சாலை வழியாக திருப்பிவிடப்பட்டன. இதனால் நகரின் பல்வேறு சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இரவு 7 மணியைக் கடந்தும் தீயணைப்புப் பணிகள் தொடா்ந்தன. தீ விபத்துக்கான காரணம் குறித்து தருமபுரி நகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.