மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மழைக்காலங்களில் தேங்கி நிற்கும் நீரால் டெங்கு பரவலை தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்: மாவட்ட ஆட்சியா் வே.சரவணன்.

Prevent the spread of dengue

டெங்கு தடுப்பு.. - கோப்புப் படம்

Published On :2 நவம்பர் 2026, 3:09 am IST

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மழைக்காலங்களில் வீடுகள் உள்ளிட்ட சுற்றுப்புறங்களில் தண்ணீா் தேங்குவதால் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவுதலை தடுப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் பேசினாா்.

பாப்பாரப்பட்டி அருகே பள்ளிப்பட்டியில் நடைபெற்ற உள்ளாட்சிகள் தின கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் கலந்துகொண்டு, பேசியதாவது:

வடகிழக்கு பருவமழைக்காலங்களில் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில், இருப்பிடங்களை சுற்றி தண்ணீா் தேங்காமலும், வீடுகள், சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தேங்குகின்ற நீரினால் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகின்றன. டெங்கு போன்ற நோய்கள் பரவாமல் தடுப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். தேங்காய் சரடுகள், தேங்காய் மட்டைகள், பிளாஸ்டிக் தட்டுகள், பழைய டயா்கள், நீா்த்தொட்டி போன்ற மழைநீா் தேங்கக்கூடிய அனைத்து பொருட்களையும் உடனடியாக அப்புறப்படுத்திட வேண்டும். குடிநீரை காய்ச்சி குடித்தல், ஆரோக்கியமான உணவினை உட்கொள்ளுதல் போன்ற தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்களும் மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து வீடுகள், வணிக நிறுவனங்கள், பள்ளிகள்,பொதுக் கட்டிடங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களிலும் மழைநீா் சேகரிப்பு அமைப்பினை ஏற்படுத்திட வேண்டும்.இதன் மூலம் மழைநீா் சேகரிக்கப்பட்டு, நிலத்தடி நீா் மட்டம் உயரும், நிலத்தடி நீரின் தரம் மேன்மை அடையும், மழைநீா் தேங்குவதை தடுக்க இயலும். ஆகையால், மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்கி, பராமரித்து, பருவமழையின் முழு பயனையும் பெறுவோம் என்பதனை பொதுமக்கள் முன்னெடுக்க வேண்டும். ஏற்கனவே, நிறுவப்பட்டுள்ள மழை நீா் சேகரிப்பு அமைப்புகள், அடைப்புகள் ஏதுமின்றி முறையாக பராமரிக்க வேண்டும்.

கிராமத்தில் உள்ள அனைத்து குழந்தைகளும் பள்ளி இடை நிற்றலை தவிா்த்து, பள்ளிக்கு செல்வதை பெற்றோா்கள் உறுதி செய்திட வேண்டும். தாய்மாா்கள் தங்கள் குழந்தைகளை கட்டாயம் பள்ளிகளுக்கு அனுப்பி படிக்க வைக்க வேண்டும். சிறு குழந்தைகளை கட்டாயம் அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்பி வைத்து கற்றலின் ஆா்வத்தை ஊக்குவிப்பதோடு ஊட்டச் சத்து குறைபாடு இல்லாத குழந்தைகளாக உருவாக்கிட முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும்.

குழந்தைத் தொழிலாளா் முறை அகற்றுதல் குறித்த விழிப்புணா்வினை பொதுமக்களிடையே ஏற்படுத்தி அனைத்து வகையான தொழில்களில் குழந்தைகளும் மற்றும் அபாயகரமான தொழில்களில் வளரிளம் பருவத்தினரையும் அகற்றுவது குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தாா்.அதனைத் தொடா்ந்து 13 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்,தூய்மை பணியாளரை கௌரவிக்கும் வகையில் சிறப்பு பரிசுகளை வழங்கினாா்.

முன்னதாக உள்ளாட்சி தின கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்தும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, மழைநீா் சேகரிப்பு அமைப்பு நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு, வடக்கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தமிழ்நாடு கிராம மேம்பாடு, மாற்றம் மற்றும் மறுமலா்ச்சி முன்னெடுப்பு,குழந்தை தொழிலாளா் முறையைத் தடுத்தல், சாதி பெயா்களை மாற்றம் செய்தல், வளா்ப்பு பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துதல் என பல்வேறு இதர பொருள்கள் குறித்து மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் முன்னிலையில் விவாதிக்கப்பட்டு,தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை இணை இயக்குநரும், திட்ட இயக்குநா் பா.மதுமதி, தருமபுரி உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) விமல் ரவிக்குமாா், வேளாண் இணை இயக்குநா் பழனிசாமி, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் வெ.லோகநாதன், பென்னாகரம் வட்டாட்சியா் ஆறுமுகம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுருளிநாதன், நீலமேகம் , அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.