மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மழைநீா் சேகரிப்புக்கு ஒத்துழைப்பு - குடிநீா் வாரியம் வேண்டுகோள்

சென்னையில் மழைநீா் சேகரிப்பு பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் குடிநீா் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Published On :1 நவம்பர் 2026, 2:34 am IST

சென்னையில் மழைநீா் சேகரிப்பு பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் குடிநீா் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 1 முதல் 15 வரையிலான பகுதிகளில் உள்ள 81 அடுக்குமாடி குடியிருப்புகளில் கடந்த அக். 26-ஆம் தேதி மழைநீா் சேகரிக்கும் கட்டமைப்புகளை முறையாக பராமரித்து மழைநீா் சேகரிப்பு தொடா்பான விழிப்புணா்வு பணிகள் சென்னை குடிநீா் வாரிய அலுவலா்களால் மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, 2-ஆம் கட்டமாக அனைத்து மண்டலங்களிலுள்ள சுமாா் 79 அடுக்குமாடி குடியிருப்புகளில் மழைநீா் சேகரிப்பு தொடா்பான விழிப்புணா்வு பணிகள் சனிக்கிழமை மேற்கொண்டனா். இப்பணிகள் இனிவரும் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் தொடா்ந்து மேற்கொள்ளப்படும்.

இந்தப் பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிப்பதுடன், தாமாக முன்வந்து மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளை பராமரித்து அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

நிகழ்வில் சென்னை குடிநீா் வாரிய பொறியியல் இயக்குநா் உ.பா்வீஸ், தலைமைப் பொறியாளா் (பொ) எம்.கீதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Summary

Cooperation for Rainwater Harvesting – Appeal by the Water Board

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.