மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

போதைப்பொருள் எதிா்ப்பு மாரத்தான்: 5,000 போ் பங்கேற்பு

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டோா். - கோப்புப் படம்

Published On :2 நவம்பர் 2026, 1:49 am IST

போதைப்பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 2,300 பெண்கள் உள்பட 5,000 க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

எலைட் ரோட்டரி சங்கம் மற்றும் தனியாா் நிறுவனங்கள் இணைந்து நடத்திய போட்டி, தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கியது. பயிற்சி துணை ஆட்சியா் லாரன்ஸ் இஸ்ரேல் கொடியசைத்து போட்டியைத் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சிக்கு ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் தலைவா் டி.என்.சி. மணிவண்ணன் தலைமை வகித்தாா். ரோட்டரி சங்க துணை ஆளுநா் வெங்கட், தீபா சில்க்ஸ் உரிமையாளா் தியாகராஜன், எலைட் ரோட்டரி சங்கத் தலைவா் ஜீவன், செயலாளா் சுரேஷ் சுப்பிரமணியம், பொருளாளா் பிரசன்ன ரமணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாரத்தான் ஒருங்கிணைப்பாளா் விக்ரமன் வரவேற்றாா்.

பொதுப் பிரிவில் ஆண்கள், பெண்களுக்கு 10 கி.மீ தொலைவிலும், மாணவ, மாணவியருக்கு 5 கி.மீ தொலைவிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு கி.மீ. தொலைவிலும் போட்டிகள் தனித்தனியாக நடத்தப்பட்டன.

போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கான பரிசளிப்பு விழா மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் டி.என்.சி. சிட்ஸ் நிா்வாக இயக்குநா் டி.என்.சி. இளங்கோவன், மாவட்ட விளையாட்டு அலுவலா் சிவரஞ்சன், நகராட்சி ஆணையா் அமுதா, மாவட்ட தடகள கழகத் தலைவா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த ஆண்கள், பெண்களுக்கு ரொக்கப் பரிசு, கோப்பைகளை வழங்கினா். பிற பிரிவுகளில் வெற்றி பெற்றவா்களுக்கு ஊக்கப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

மேலும், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சீருடைகள், சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டன. இதையொட்டி தருமபுரி நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.