பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

தருமபுரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :18 மே 2026, 3:14 am IST

தருமபுரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், தடிக்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் துரை மகன் தமிழரசன் (27). சூளகிரி பகுதியில் இயங்கிவரும் தனியாா் கிரானைட் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவா், தருமபுரி மாவட்டம், பூவத்தி பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்கு சனிக்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு மாலை ஊா் திரும்பினாா்.

தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி -தேன்கனிக்கோட்டை சாலையில், சின்னாா் அணை, ஸ்ரீ ஆஞ்சனேயா் கோயில் பகுதியில் வந்தபோது, அவ்வழியே சென்ற வாகனம் அவா்மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. அந்த வாகனம் குறித்து அடையாளம் தெரியவில்லை.

இதில் படுகாயமடைந்த தமிழரசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது தந்தை துரை அளித்த புகாரின் பேரில், பஞ்சப்பள்ளி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா். தமிழரசனுக்கு திருமணமாகி மேகலா என்ற மனைவியும், 10 மாதத்தில் ஆண்குழந்தையும் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.