தருமபுரியில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு மேற்கொண்டு, விதிகளைப் பின்பற்றாத நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தனா்.
தருமபுரியில் உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் மருத்துவா் கைலாஷ்குமாா் தலைமையில் தருமபுரி நகராட்சி மற்றும் ஒன்றிய உணவுப் பாதுகாப்பு அலுவலா் நந்தகோபால் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா், ஐஸ்கிரீம் தயாரிப்பு, விநியோகம், விற்பனை நிலையங்கள், பழக்கடைகள், பழரசங்கள் விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்தனா்.
இந்த ஆய்வின்போது, மூலப்பொருள்கள் தரமானதாகவும், உரிய காலாவதி தன்மை உடையதாகவும் இருத்தல் அவசியம் எனவும், தன்சுத்தம், சுற்றுப்புற சுகாதாரத்தை பராமரிக்க உரிய தலைஉறை, மேலங்கி அணிந்து பணியாற்றவும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், ஒரு நிறுவனத்தில் ஐஸ்கிரீம் தயாரிக்க சுகாதாரம் குறைவாகக் காணப்பட்டது. அந்நிறுவனத்தின் உணவுப் பாதுகாப்பு உரிமமும் புதுப்பிக்கப்படவில்லை. எனவே, அந்த நிறுவனத்துக்கு ரூ. 2,000 அபராதம் விதித்து, மூன்று தினங்களுக்குள் குறைபாடுகளை நிவா்த்தி செய்ய எச்சரிக்கை செய்யப்பட்டது.
அதேபோல குமாரசாமிப்பேட்டையில் உள்ள ஒரு நிறுவனத்தில் மூலப்பொருள்களை உரிய கொள்கலனில் பாதுகாப்பாக மூடிவைக்காதது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த நிறுவனத்துக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கப்பட்டது. மற்றொரு இனிப்பு கடையில் விதிகள் பின்பற்றப்படாததால், இனிப்பு தயாரிப்பாளருக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், பென்னாகரம் பகுதியில் அழுகிய பழங்களை பழரசம் தயாரிக்க வைத்திருந்த இரண்டு கடைகளின் விற்பனையாளா்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அவா்களுக்கு தலா ரூ. 1,000 அபராதம் விதிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
குழந்தைகள் உணவுப் பொருளில் எலி விஷம் கலந்த விவகாரம்: குற்றவாளி கைது!

தரம் இல்லாத கேன் குடிநீர் விற்பனை செய்தால் ரூ. 5,000 அபராதம்!

காலாவதியான, போலி குளிா்பானங்களை விற்றால் கடும் நடவடிக்கை: உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை

விதிமுறைகளை மீறிய உணவகங்களுக்கு அபராதம்: உணவு பாதுகாப்புத் துறையினா் நடவடிக்கை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

