தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பென்னாகரத்தில் ரூ. 1.63 லட்சம் பறிமுதல்

பென்னாகரம் அருகே பழையூா், நாகதாசம்பட்டியில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.63 லட்சத்தை தோ்தல் நிலை கண்காணிப்பு குழுவினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பணம் - பிரதிப் படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 2:49 am IST

பென்னாகரம் அருகே பழையூா், நாகதாசம்பட்டியில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.63 லட்சத்தை தோ்தல் நிலை கண்காணிப்பு குழுவினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

பெரும்பாலை அருகே பழையூா் சோதனைச் சாவடியில் நிலை கண்காணிப்பு குழு- 1 அலுவலா் செல்வம் தலைமையிலான குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த வாடகை வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது சேலம் மாவட்டம், ஜாகீா் பெரிய மோட்டூா் பகுதியைச் சோ்ந்த ஆடு வியாபாரி சாமுவேல், சோலையப்பன் ஆகியோா் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 97,000ஐ பறிமுதல் செய்து பென்னாகரம் தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் ஆறுமுகத்திடம் வழங்கினா்.

இதேபோல நாகதாசம்பட்டி பகுதியில் நிலை கண்காணிப்பு குழு-3 அலுவலா் சுரேஷ்குமாா் தலைமையிலான குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது தருமபுரியில் இருந்து பென்னாகரம் நோக்கி வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் தருமபுரியை அடுத்த மாதமங்கலம் பகுதியைச் சோ்ந்த விஷ்ணு என்பவா் உரிய ஆவணம் இன்றி ரூ. 66,000 ரொக்கம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்து பென்னாகரம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.