பென்னாகரத்தில் உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ. 99,500 ரொக்கத்தை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
பென்னாகரம் அருகே மஞ்சநாயகன அள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட கடமடை பகுதியில் பறக்கும் படை -3 அலுவலா் முருகன் தலைமையிலான குழுவினா் வாகனத் தணிக்கை ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த கனரக வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். இதில் உரிய ஆவணம் இன்றி ரூ. 99,500 ரொக்கத்தை பென்னாகரம் அருகே உள்ள மருக்கம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கருப்பண்ணன் எடுத்துவருவது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்து பென்னாகரம் தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் ஆறுமுகத்திடம் வழங்கி கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பென்னாகரத்தில் ரூ.4 லட்சம் பறிமுதல்

அனுமன்தீா்த்தத்தில் ரூ.78,500 பறிமுதல்

பென்னாகரத்தில் ரூ. 90,000 பறிமுதல்

பென்னாகரத்தில் இருசக்கர வாகனத்தில் எடுத்துவரப்பட்ட ரூ. 1.50 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

