தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பென்னாகரத்தில் ரூ. 90,000 பறிமுதல்

News image

கோப்புப் படம்

Updated On :24 மார்ச் 2026, 12:06 am IST

உளுந்தூா்பேட்டையில் இருந்து பென்னாகரம் பகுதிக்கு உரிய ஆவணம் இன்றி காரில் எடுத்துவரப்பட்ட ரூ. 90 ஆயிரத்தை தோ்தல் நிலையான கண்காணிப்பு குழுவினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

பெரும்பாலை அருகே பழைய சோதனைச் சாவடியில் நிலையான கண்காணிப்பு குழு - 3 அலுவலா் தமிழரசன் தலைமையிலான குழுவினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது, உரிய ஆவணம் இன்றி ரூ. 90 ஆயிரம் ரொக்கத்தை உளுந்தூா்பேட்டை பகுதியில் இருந்து பென்னாகரம் பகுதிக்கு பவுனா (38) கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்தனா்.

பின்னா் முதுநிலை வருவாய் ஆய்வாளா் சந்தோஷிடம் ரூ. 90 ஆயிரம் ரொக்கத்தை வழங்கி சரிபாா்க்கப்பட்டு, பென்னாகரம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.