தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமையும் என்று திமுக துணைப் பொதுச் செயலாளா் கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.
தருமபுரி மாவட்டம், அரூரில் திமுக வேட்பாளா் அ.சண்முகத்தை ஆதரித்து கனிமொழி எம்.பி. பேசியதாவது:
கடந்த 2021 இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுக அளித்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இத்தோ்தலில் திமுக வெற்றி பெற்றால் மகளிா் உரிமைத்தொகை ரூ. 2 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும். மாணவா்களுக்கான ஊக்கத்தொகை ரூ. 1,500 ஆக உயா்த்தப்படும். வேலைதேடும் இளைஞா்களுக்கு பயிற்சிக் காலத்தில் 6 மாத காலத்துக்கு உதவித்தொகை வழங்கப்படும். 35 லட்சம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். வீட்டு உபயோகப் பொருள்களை வாங்குவதற்காக மகளிருக்கு ரூ. 8 ஆயிரம் மதிப்பில் கூப்பன் வழங்கப்படும்.
பேரவைத் தோ்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றி பெற்று மீண்டும் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் 7-ஆவது முறையாக ஆட்சி அமைக்கும்.
அரூா் சட்டப் பேரவைத் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் கலசப்பாடி மலைக் கிராமங்களுக்கு ரூ. 12.5 கோடியில் தாா்சாலை வசதி, அரூா் வழியாகச் செல்லும் தருமபுரி-திருவண்ணாமலை சாலை ரூ. 410 கோடியில் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. ரூ. 20 கோடியில் வள்ளிமதுரையில் இருந்து அரூா் நகருக்கு குடிநீா் எடுத்து வரும் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது.
கே.ஈச்சம்பாடி அணைக்கட்டின் வலது மற்றும் இடதுபுற வாய்க்கால்கள் ரூ. 9.5 கோடியில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரூா் அரசு மருத்துவமனையில் ரூ. 12.51 கோடியில் கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
எனவே, அரூா் தொகுதி மக்களின் வளா்ச்சிக்காகப் பாடுபடும் திமுக கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளா் அ.சண்முகத்துக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.
இதில் தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆ.மணி, நகா்மன்றத் துணைத் தலைவா் சூா்யா து.தனபால், நகரச் செயலாளா் முல்லை ரவி உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திமுக ஆட்சி அமைந்தால்தான் தமிழக உரிமைகள் பாதுகாக்கப்படும்! கனிமொழி பேச்சு

பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகள் நிலைப்பதில்லை: கனிமொழி எம்.பி.

அதிமுகவினா் வன்முறைக்கு மக்கள் பாடம் புகட்டுவா்: கனிமொழி எம்.பி.

யாா் தவறு செய்தாலும் சட்டப்படி தண்டனை பெற்றுத்தருவது திமுக ஆட்சி: கனிமொழி எம்.பி.
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

