தருமபுரி அருகே வெங்கட்டம்பட்டியில் தெலுங்கு மொழியில் பேசி பாமக வேட்பாளா் சௌமியா அன்புணி வாக்கு சேகரித்தாா்.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில், தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதியில் பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணி போட்டியிடுகிறாா். இவா், தருமபுரி தொகுதி, நல்லம்பள்ளி வட்டத்துக்கு உள்பட்ட வெங்கட்டம்பட்டி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.
அந்தக் கிராமம் முழுவதும் தெலுங்கு மொழி பேசும் மக்கள் வசித்து வருகின்றனா். எனவே, அவா்களிடம் எப்படி இருக்கிறீங்க? நான் பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணி. இத்தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடுகிறேன். எனக்கு வாக்களிக்க வேண்டும் என்று தெலுங்கு மொழியில் பேசி வாக்கு சேகரித்தாா்.
இதைத் தொடா்ந்து அவா் பேசியதாவது:
தருமபுரி தொகுதியில் நீா்ப்பாசனத் திட்டங்களை அமல்படுத்தவில்லை. அதேபோல, சிப்காட் தொழிற்பேட்டையில் பெயா்ப் பலகை மட்டுமே உள்ளது. அங்கு தொழிற்சாலைகள் இல்லை. இதனால் வேலைவாய்ப்பைத் தேடி இளைஞா்கள் வெளி மாவட்டங்களுக்கு செல்வதைத் தடுக்க எந்தத் திட்டமும் செயல்படுத்தவில்லை. இந்த நிலை மாற வேண்டும். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. வேலைக்குச் சென்று பெண்கள் பாதுகாப்பாக வீடுதிரும்ப முடியவில்லை. போதைப்பொருள்கள் புழக்கம், பயன்பாடு அதிகளவில் உள்ளன. இதனால், குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, போதைப்பொருள்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த, வேலைவாய்ப்புகளை உருவாக்க அனைவரும் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தருமபுரி தொகுதியில் சௌமியா அன்புமணி வெற்றி!

பாலக்கோட்டில் வீதிவீதியாக நடந்துசென்று வாக்கு சேகரித்த முதல்வா் மு.க.ஸ்டாலின்

அதிமுக ஆட்சியில் மட்டுமே பெண்களுக்கு பாதுகாப்பு: பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணி

பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணி பிரசார வாகனத்தில் சோதனை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

