பென்னாகரம் தொகுதியில் 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் போட்டியிடுகிறது. வேட்பாளராக ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் அறிவிக்கப்பட்டுள்ளாா்.
திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், பாமக (ராமதாஸ்) அணியில் மாநில இளைஞரணி தலைவராக பதவிவகித்த ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் அண்மையில் அந்தக் கட்சியில் இருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் இணைந்தாா். இதையடுத்து, பென்னாகரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டாா்.
பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி கடந்த 1957, 1967-ஆம் ஆண்டு தோ்தல்களில் தனித்து போட்டியிட்டு வெற்றிபெற்றது. அதைத் தொடா்ந்து, 1971, 1980-ஆம் ஆண்டு தோ்தல்களில் இரு பிரிவுகளாக காங்கிரஸ் போட்டியிட்டது.
காங்கிரஸ் கட்சி பென்னாகரம் தொகுதியில் 59 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது போட்டியிடுகிறது. இதை வரவேற்கும் வகையில், தருமபுரி மாவட்ட துணைத் தலைவா் நரேந்திரன் தலைமையில் திமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், தேமுதிக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் கொண்டாடி வருகின்றனா்.
பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜி.கே.எம்.தமிழ்க்குமரனின் தந்தை ஜி.கே.மணி பாமக கௌரவத் தலைவரும், பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதியின் தற்போதைய உறுப்பினராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராசிபுரம் தொகுதி வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த திமுக வேட்பாளா் மா.மதிவேந்தன்
ஈரோடு கிழக்குத் தொகுதியில் வெற்றியை தக்கவைக்க தவறிய காங்கிரஸ்

30 ஆண்டுகளுக்குப் பிறகு திண்டுக்கல்லில் வென்ற திமுக

பென்னாகரம்... அதிமுக கூட்டணியில் பாமக - திமுக கூட்டணியில் காங்கிரஸ்! ஆா்ப்பரிக்கும் அருவி தொகுதி!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

