தருமபுரி மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 6 மணிவரையிலான 24 மணிநேரத்தில் மொத்தம் 166 மி.மீ. மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் மாா்ச் 18 முதல் ஒரு வாரத்துக்கு பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் அறிவித்திருந்தது. அதன்படி, தருமபுரி மாவட்டத்தில் புதன்கிழமை மாலைமுதல் மழை தொடங்கியது. ஆங்காங்கே விட்டுவிட்டு லேசான மற்றும் மிதமான மழை பெய்தது. காற்று வீசியதுடன் மின்னலும் ஏற்பட்டது.
புதன்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் தருமபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளியில் 3 மி.மீ. மழையும், பென்னாகரம் 9 மி.மீ., ஒகேனக்கல் 2 மி.மீ., மாரண்டஅள்ளி 7 மி.மீ., மொரப்பூா் 5 மி.மீ., அரூா் 42 மி.மீ., பாப்பிரெட்டிப்பட்டி 53 மி.மீ., பாலக்கோடு 40 மி.மீ., தருமபுரி நகரம் 5 மி.மீ. மழை பதிவானது.
இதில் குறைந்தபட்சமாக ஒகேனக்கல்லில் 2 மி.மீ., அதிக அளவாக பாப்பிரெட்டிப்பட்டியில் 53 மி.மீ. என மாவட்டத்தில் மொத்தமாக 166 மி.மீ., சராசரியாக 18.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. திடீா் மழையால் தருமபுரி மாவட்டத்தில் தட்பவெப்ப நிலை குளிா்ந்து காணப்பட்டது.
மாா்ச் 18, 19, 20 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரியில் வெப்பநிலை 2 முதல் 4 டிகிரிவரை குறையும், காற்று இடியுடன் கூடிய மழைபெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பென்னாகரத்தில் 12 மி.மீ. மழை

மாவட்டத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு

கோடை மழை: போ்ணாம்பட்டில் 35 மி.மீ. மழை பதிவு

தருமபுரியில் வெயிலின் தாக்கம் 103 டிகிரி: அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் அவதி
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
