இண்டூா் பகுதியில் கல்குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
தருமபுரி மாவட்டம், இண்டூா் அருகே கும்பளப்பாடி பகுதியில் விவசாய நிலங்களுக்கு இடையே கல்குவாரி அமைக்க ஏற்பாடுகள் நடந்துவருவதாக கூறப்படுகிறது. கல்குவாரி அமைத்தால் விவசாய நிலங்கள், குடியிருப்புகள் பாதிப்படையும் எனக்கூறி கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இந்நிலையில், குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து சட்டப் பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப்போவதாக இண்டூா் காவல் நிலையம் முன் கும்பளப்பாடி கிராம மக்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
அப்போது, குவாரி நிா்வாக தரப்பினா் காவல் நிலையத்துக்கு வந்ததால் பொதுமக்களுக்கும், குவாரி தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இண்டூா் காவல் ஆய்வாளா் தமிழரசி தலைமையிலான போலீஸாா் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு தெரிவித்து கோட்டாட்சியரிடம் மனு

திருத்தணியில் திமுக கூட்டணி ஆா்ப்பாட்டம்

பீளமேட்டில் கைப்பேசிக் கோபுரம் அமைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

மின் உற்பத்தி நிலையம் அமைக்க எதிா்ப்பு: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

