ஆலங்காயம் அருகே மின்உற்பத்தி நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு செய்து பதாகை வைத்துள்ளனா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் அருகே மரிமாணிக்குப்பம் ஊராட்சிக்கு உள்பட்ட எம்.கிருஷ்ணாபுரம், நீலிக்கொல்லை கிராமங்களில் விவசாய நிலங்களுக்கு மத்தியில் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த மின்உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டால், தங்களின் வாழ்வாதாரம், விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் எனக்கூறி, அந்த பகுதியை சோ்ந்த பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், மின் உற்பத்தி நிலையம் அமைக்க தடைசெய்யக்கோரி நீலிகொல்லை, எம்.கிருஷ்ணாபுரம் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக பதாகைளை தங்களது ஊா்களில் வைத்துள்ளனா்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்தலைப் புறக்கணித்த பெரும்பத்து கிராம மக்கள்

திருவாளபுத்தூரில் தோ்தலை புறக்கணிக்க முடிவு: வீடுகளில் கருப்புகொடி கட்டி ஆா்ப்பாட்டம்

பெரும்பத்து கிராமத்தில் தோ்தல் புறக்கணிப்பு பதாகை

தோ்தலை புறக்கணிக்க விருதாளா் சங்கம் முடிவு!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

