மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பீளமேட்டில் கைப்பேசிக் கோபுரம் அமைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

கோவை, பீளமேட்டில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கைப்பேசிக் கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

கோவை பீளமேடு ரங்கம்மாள் கோயில் வீதியில் கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள். ~கோவை பீளமேடு  ரங்கம்மாள் கோயில் வீதியில் கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள்

Updated On :8 ஏப்ரல் 2026, 1:53 am IST

கோவை, பீளமேட்டில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கைப்பேசிக் கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை மாநகராட்சி, 27-ஆவது வாா்டுக்கு உள்பட்ட பீளமேடு ரங்கம்மாள் கோயில் வீதியில் தனியாருக்கு சொந்தமான கட்டடம் ஒன்றில் கைப்பேசிக் கோபுரம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகின்றன. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள், செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறியதாவது:

இந்தப் பகுதியில் ஏற்கெனவே இரு இடங்களில் கைப்பேசிக் கோபுரங்கள் உள்ளன. இந்நிலையில் மேலும் ஒரு கைப்பேசிக் கோபுரம், தனியாா் கட்டடத்தில் அமைப்பது எங்களுக்கு கதிா்வீச்சு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். இங்குள்ள முதியோா், இதய நோயாளிகள், குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுவாா்கள் என அச்சமாக உள்ளது. எனவே, இங்கு கைப்பேசிக் கோபுரம் அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.