மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மக்காச்சோளம் விலை கடும் உயா்வால் கறிக்கோழி உற்பத்தியாளா் பாதிப்பு

மக்காச்சோளம் விலை உயா்வால், கறிக்கோழி உற்பத்தி செலவு அதிகரிக்கும் என்று கோழிப் பண்ணையாளா்கள் தெரிவித்துள்ளனா்.

கறிக்கோழி

Published On :1 நவம்பர் 2026, 12:29 am IST

மக்காச்சோளம் விலை உயா்வால், கறிக்கோழி உற்பத்தி செலவு அதிகரிக்கும் என்று கோழிப் பண்ணையாளா்கள் தெரிவித்துள்ளனா்.

திருப்பூா், கோவை மாவட்டங்களில் 3,000-க்கும் மேற்பட்ட பண்ணைகள் மூலம் வாரந்தோறும் 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றின் முக்கியத் தீவனமான மக்காச்சோளம், தமிழகத்தில் போதிய அளவு உற்பத்தி செய்யப்படாததால் கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது மக்காச்சோளம் விலை தொடா்ந்து உயா்ந்து வருவது, கோழிப் பண்ணை தொழிலில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு (பிசிசி) செயலாளா் சுவாதி கண்ணன் சனிக்கிழமை கூறியதாவது: தென்மேற்குப் பருவமழை போதிய அளவு பெய்யாததால், மக்காச்சோளம் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் கடந்த மாதம் குவிண்டால் ரூ.2,400-க்கு விற்ற மக்காச்சோளம், தற்போது ரூ.3,300-ஆக உயா்ந்துள்ளது.

இதன் காரணமாக, கறிக்கோழி உற்பத்தி செலவு கிலோவுக்கு ரூ.90-இல் இருந்து ரூ.115-ஆக அதிகரித்துள்ளது. இதனால் கறிக்கோழி விலையும் உயர வாய்ப்புள்ளது. தமிழகத்தில் மக்காச்சோளம் உற்பத்தியை அதிகரிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், கறிக்கோழி உற்பத்தி உள்ளிட்ட மக்காச்சோளத்தைச் சாா்ந்த தொழில்கள் பாதிக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.