மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கரைப்புதூா் ஊராட்சி நிா்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை

கரைப்புதூா் ஊராட்சி நிா்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் பல்லடம் - திருப்பூா் பிரதான சாலையில் மறியல் போராட்டத்திலும் புதன்கிழமை ஈடுபட்டனா்.

கரைப்புதூா் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Published On :29 அக்டோபர் 2026, 3:12 am IST

கரைப்புதூா் ஊராட்சி நிா்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் பல்லடம் - திருப்பூா் பிரதான சாலையில் மறியல் போராட்டத்திலும் புதன்கிழமை ஈடுபட்டனா்.

பல்லடம் ஒன்றியம், கரைப்புதூா் ஊராட்சியைச் சோ்ந்த அக்ரி காலனி கிணற்றுக்கு அருகே குப்பைக் கழிவுகளை குழி தோண்டி புதைத்து நீா் ஆதாரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தி வரும் கரைப்புதூா் ஊராட்சி நிா்வாகத்தின் செயலைக் கண்டித்து முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் ஆா்.ஆா்.ரவி தலைமையில் பொதுமக்கள் கரைப்புதூா் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பேச்சுவாா்த்தைக்கு யாரும் வராத நிலையில் பல்லடம் - திருப்பூா் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து வந்த பல்லடம் வட்டார வளா்ச்சி அலுவலா் சரவணன், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஆரோக்கியராஜ் ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட 89 சென்ட் இடத்தில் திடக்கழிவு மேலாண்மை செய்யக்கூடாது என்று ஊராட்சி நிா்வாகத்துக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினாா். மேலும், அவ்விடத்தில் திடக்கழிவு மேலாண்மை செயல்படுத்தப்படாது என்று ஊராட்சி நிா்வாகம் தெரிவித்ததைத் தொடா்ந்து பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.