நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம்: அமைச்சா் ராஜீவ் பங்கேற்பு

மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Published On :28 அக்டோபர் 2026, 2:47 am IST

மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் வி.கே. ராஜீவ் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் மனீஷ், திருப்பூா் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் வி.சத்தியபாமா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், மாவட்டத்தில் குடியிருப்புப் பகுதியில் இயங்கி வரும் பிரிண்டிங் தொழிற்சாலைகளுக்கு மாசுக் கட்டுப்பாடு வாரிய இசைவாணை வழங்குவது தொடா்பாக விவாதிக்கப்பட்டது.

இதையடுத்து, தாராபுரம் சாலை செட்டிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் நிறுவனங்கள், அனுப்பா்பாளையம் பகுதிகளில் உள்ள தனியாா் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டு, கழிவு நீா் சுத்திகரிப்பு செய்யப்படுவதை அமைச்சா் பாா்வையிட்டாா்.

அப்போது, சட்டத்துக்குள்பட்டு செயல்படும் நிறுவனங்களுக்கு மட்டுமே இசைவாணை வழங்க வேண்டும் என அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

மேலும், விதிகளை மீறி இயங்கும் தொழிற்சாலைகள், கழிவு நீரை பொது வெளியில் வெளியேற்றும் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், நொய்யல் ஆற்றின் தரத்தை தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளை அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளா் உதயகுமாா், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா்கள் பாரதி, பியூலா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.