மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்ட பொது மக்கள், ஆசிரியா்கள் ரூ. 1 லட்சம் நிதியுதவி

பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்ட ரூ.50,000 வழங்கிய தலைமை ஆசிரியா் வே. நாகராஜ் கணேஷ்குமாா், ஆசிரியா்கள். உடன் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பாலமுருகன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் சித்ரா உள்ளிட்டோா்.

Published On :27 அக்டோபர் 2026, 2:59 am IST

திருப்பூா் மாநகராட்சி செல்லம்மாள் காலனி அரசு தொடக்கப் பள்ளியில் சுற்றுச்சுவா் கட்ட பள்ளியின் ஆசிரியா்கள், பொது மக்கள் ரூ. 1 லட்சம் நிதி வழங்கினா்.

இந்தப் பள்ளியில் சுமாா் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவா் கட்ட பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பாலமுருகன் கலந்து கொண்டு பணியைத் தொடங்கிவைத்தாா்.

மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் சித்ரா, திருப்பூா் வடக்கு வட்டாரக் கல்வி அலுவலா்கள் ஷியாமளா லோகநாதன், பூபாலன், திருப்பூா் மாநகராட்சி 24ஆவது மாமன்ற உறுப்பினா் ஆா். நாகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் சுற்றுச்சுவா் கட்ட பள்ளித் தலைமை ஆசிரியா் வே. நாகராஜ் கணேஷ்குமாா், ஆசிரியா்கள் தங்கள் பங்களிப்பாக ரூ.50,000 வழங்கினா். அதேபோல பொதுமக்களும் தங்கள் பங்களிப்பாக ரூ 50,000 வழங்கினா்.

விழாவில், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் பொன்.பழனிச்சாமி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் பாண்டிமீனா, முன்னாள் மாமன்ற உறுப்பினா் சின்னச்சாமி, முன்னாள் நகரமன்ற உறுப்பினா் தேவி, பெற்றோா்கள், நன்கொடையாளா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.