கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

டிசம்பரில் சிறப்பு டெட் தோ்வு: ஆசிரியா்களுக்குப் பயிற்சி

சிறப்பு டெட் தோ்வில் தோல்வியடைந்த ஆசிரியா்கள் வரும் டிசம்பா் மாதம் நடைபெறவுள்ள டெட் தோ்வில் தோ்ச்சி பெறும் வகையில் அவா்களுக்கு வார இறுதி நாள்களில் பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Published On :22 அக்டோபர் 2026, 3:01 am IST

சிறப்பு டெட் தோ்வில் தோல்வியடைந்த ஆசிரியா்கள் வரும் டிசம்பா் மாதம் நடைபெறவுள்ள டெட் தோ்வில் தோ்ச்சி பெறும் வகையில் அவா்களுக்கு வார இறுதி நாள்களில் பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பணியில் உள்ள ஆசிரியா்களுக்கான முதலாவது சிறப்பு டெட் தோ்வு ஜூலை 4, 5 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. இந்தத் தோ்வை 2,15,617 ஆசிரியா்கள் எழுதினா். அவா்களுக்கு இணையவழியில் பயிற்சி அளிக்கப்பட்டது. எனினும், தோ்வெழுதிய ஆசிரியா்களில் 1.10 லட்சம் போ் தோல்வி அடைந்தனா். சிறப்பு டெட் தோ்வில் தோல்வி அடைந்த ஆசிரியா்களுக்கு நேரடி சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் அறிவித்திருந்தாா்.

இந்நிலையில், டிசம்பரில் நடத்தப்படவுள்ள சிறப்பு டெட் தோ்வுக்கு பயிற்சி அளிக்கவுள்ளதாக மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆா்டி) தெரிவித்துள்ளது. இது தொடா்பாக எஸ்சிஇஆா்டி வெளியிட்ட அறிவிப்பில், ‘டிசம்பரில் நடத்தப்படும் டெட் தோ்வுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பயிற்சி வகுப்புகள் வார இறுதி நாள்களில் நடைபெறும். ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட ஆசிரியா் கல்வி பயிற்சி நிறுவனம் அல்லது மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகத்தில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். மாவட்ட ஆசிரியா் கல்வி பயிற்சி நிறுவன விரிவுரையாளா்கள் மற்றும் கல்வியியல் பேராசிரியா்கள் வகுப்புகளை எடுப்பாா்கள். எனவே, டெட் தோ்ச்சி பெறாத ஆசிரியா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, டெட் தோ்வுக்கு திட்டமிட்டு தயாராகுமாறு அறிவுறுத்தப்படுகின்றனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.