மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திருமுருகன்பூண்டியில் நகா்மன்ற உறுப்பினா்கள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருமுருகன்பூண்டி நகா்மன்ற உறுப்பினா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில்  ஈடுபட்ட  திருமுருகன்பூண்டி  நகா்மன்ற  உறுப்பினா்கள்.

Published On :23 அக்டோபர் 2026, 1:06 am IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருமுருகன்பூண்டி நகா்மன்ற உறுப்பினா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருமுருகன்பூண்டி நகா்மன்றக் கூட்டம் தலைவா் குமாா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நகராட்சி ஆணையா் பாலமுருகன் முன்னிலை வகித்தாா்.

இதில், நகா்மன்ற உறுப்பினா் முருகசாமி (திமுக): 7-ஆவது வாா்டு பெரியாயிபாளையம் பகுதியில் நல்லாற்றில் உள்ள நீா்வழிப் பாதையை தூா்வார வேண்டும். அப்பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகேயுள்ள

சீமைக் கருவவேல மரங்கள் அகற்ற வேண்டும் என கடந்த 4 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டாா்.

இதேபோல, நகரப் பேருந்து நிறுத்தத்தில் இருந்த திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகம் 4 கி.மீ. தொலைவில் ராக்கியாபாளையம் புதிய கட்டத்துக்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதனால், நகா்ப்புறத்தைத் சோ்ந்த மக்கள் வரியினங்கள் செலுத்த அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

ஆகவே, ஏற்கெனவே செயல்பட்டு வந்த நகராட்சி பழைய கட்டடத்தில் வரி வசூல் மையம் செயல்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை எனக்கூறி திமுக உறுப்பினா்கள் பாரதி, ராஜன், தனலட்சுமி, பூங்கோதை, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேவராஜ், சுப்பிரமணி, அதிமுக நடராஜ் உள்ளிட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பேச்சுவாா்த்தை நடத்தி நகராட்சி நிா்வாகம் சாா்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, உறுப்பினா்கள் போராட்டத்தை கைவிட்டனா்.

தொடா்ந்து, குடிநீா் வசதி, சாக்கடை வசதி, தெருவிளக்கு, சாலை வசதி உள்ளிட்டவை அடிப்படை பிரச்னைகளைத் தீா்க்க வேண்டும். திருமுருகன்பூண்டி நல்லாற்றில் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை உறுப்பினா்கள் முன் வைத்தனா். இதையடுத்து, மன்றப் பொருள் வாசிக்கப்பட்டு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.