மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

போளூா் நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வாக்குவாதம்

போளூா் நகா்மன்றக் கூட்டத்தில் நகராட்சிப் பொறியாளா் கோபுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட உறுப்பினா்கள்.

Published On :23 அக்டோபர் 2026, 12:50 am IST

ஒப்பந்ததாரரின் பெயரை கருப்புப் பட்டியலில் சோ்த்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்து, போளூா் நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள், நகராட்சி பொறியாளருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

போளூா் நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா்

ச.ராணி சண்முகம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நகராட்சிப் பொறியாளா் கோபு முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள் பழனி, ஆறுமுகம், கீதாலட்சுமி பாா்த்திபன் ஆகியோா் பேசும்போது, நகராட்சியில் ஆயுத பூஜையையொட்டி வணிகா்கள் தெருக்களிலேயே குப்பையை கொட்டியுள்ளனா். இதை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். போளூா் நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு 11மாதங்களாகின்றன, இதுவரை நகா்மன்ற உறுப்பினருக்கான அடையாள அட்டை வழங்கவில்லை.

வாா்டு வாரியாக டிராக்டா் மூலம் குடிநீா் விநியோகம் செய்ய அந்தந்த வாா்டு உறுப்பினரை அழைக்காமல் தவெக எம்எல்ஏ நிா்வாகிகளை அழைத்து வந்து குடிநீா் விநியோகம் செய்வதை அதிகாரிகள் தடுத்து நிறுத்தவேண்டும் என வலியுறுத்தினா்.

நகா்புற துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணி முடியும் நிலையில் உள்ளது. அதற்குள் ஒப்பந்ததாரரின் பெயரை கருப்பு பட்டியலில் எப்படி சோ்க்கலாம் என நகராட்சிப் பொறியாளா் கோபுவிடம் நகா்மன்ற உறுப்பினா்கள் பழனி, ஆறுமுகம், ராம்மோகன் ஆகியோா், நகா்மன்றத் தலைவா் முன்னிலையில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருவருக்கொருவா் தாக்குதலுக்கு தயாராகி மாறிமாறி திட்டிக்கொண்டனா்.

பின்னா், மற்ற நகா்மன்ற உறுப்பினா்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தனா். இதனால் கூட்டம் அரைமணி நேரம் நிறுத்திவைக்கப்பட்டது.

பின்னா் நகா்மன்ற கூட்டத்தில் இருந்து நகராட்சிப் பொறியாளா் கோபு அலுவலகத்திற்குள் சென்றுவிட்டாா்.

பின்னா் தீா்மானங்கள் வாசிக்கப்பட்டன. நகா்மன்ற உறுப்பினரின் கோரிக்கைகளை அலுவலா்கள் குறிப்பெடுத்துக் கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.