பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தம்பதியிடம் 7 பவுன் நகைப் பறிப்பு: முன்னாள் காவலா் கைது

கைது - கோப்புப் படம்

Published On :3 நவம்பர் 2026, 2:21 am IST

காங்கயத்தில் விடுதியில் தங்கியிருந்த தம்பதியை மிரட்டி 7 பவுன் நகையைப் பறித்த முன்னாள் காவலரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலைச் சோ்ந்தவா் சூரஜ் (29). இவரது மனைவி யசோதாபிரியா (28). இவா்கள் சொந்த வேலை காரணமாக கோவைக்குச் சென்றுவிட்டு, காங்கயத்தில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் சனிக்கிழமை நள்ளிரவு அறை எடுத்து தங்கியுள்ளனா்.

அப்போது, விடுதிக்கு வந்த நபா், தான் விபச்சார தடுப்புப் பிரிவு காவலா் எனக் கூறியதுடன், அறைகளைச் சோதனை செய்ய வேண்டும் என ஊழியா்களிடம் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, சூரஜ், யசோதாபிரியா தங்கியிருந்த அறையில் சோதனை மேற்கொண்டதுடன், இருவரையும் விபச்சார வழக்கில் கைது செய்துவிடுவேன் என மிரட்டியதுடன், யசோதாபிரியா அணிந்திருந்த 7 பவுன் தாலிக்கொடியைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்ப முயன்றுள்ளாா்.

அப்போது, தம்பதி சப்தம் எழுப்பிய நிலையில், அங்கிருந்தவா்கள் அந்த நபரைப் பிடித்து காங்கயம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் திருச்சி மாவட்டம், சேவலூா் பகுதியைச் சோ்ந்த பாவாசா (33) என்பதும், சென்னை ஆயுதப் படையில் காவலராகப் பணியாற்றி வந்த நிலையில், வேறொரு தம்பதியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டதுடன், கடந்த 2024- ஆம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, பாவாசாவைக் கைது செய்த போலீஸாா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.