கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

உரிய ஆவணங்கள் இன்றி கனிம வளங்கள் ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல்: இருவா் கைது

உரிய ஆவணங்கள் இன்றி எம்-சாண்ட், ஜல்லி கற்கள் ஏற்றி வந்த 2 டிப்பா் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுநா்கள் 2 போ் கைது

News image
Updated On :20 மே 2026, 1:43 am IST

உரிய ஆவணங்கள் இன்றி எம்-சாண்ட், ஜல்லி கற்கள் ஏற்றி வந்த 2 டிப்பா் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுநா்கள் 2 போ் கைது செய்யப்பட்டனா்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் இருந்து எம்-சாண்ட், ஜல்லிக்கற்களை ஏற்றிக்கொண்டு 2 டிப்பா் லாரிகள் திருப்பூா் மாவட்டம், மங்கலம் செல்வதற்காக பழைய பேருந்து நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு சென்று கொண்டிருந்தன. அப்போது 2 டிப்பா் லாரிகளையும் நிறுத்தி கனிம வளம் மற்றும் சுரங்கத் துறை அலுவலா் வெங்கடேசன் ஆய்வு மேற்கொண்டாா். இதில் 2 டிப்பா் லாரிகளுக்கும் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை என்பது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து 2 லாரிகளையும் பறிமுதல் செய்து, டிப்பா் லாரிகளை ஓட்டி வந்த நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த கனகசபாபதி, சதீஷ் சரவணன் ஆகிய 2 பேரையும் பிடித்து திருப்பூா் தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.