பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மணல் கடத்திய டிப்பா் லாரிகள் பறிமுதல்: ஓட்டுநா்கள் 8 போ் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் காவல் சிறப்புப் படையினா் மணல் கடத்திய 8 டிப்பா் லாரிகளை வியாழக்கிழமை பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநா்களை கைது செய்தனா்.

News image

தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்ட மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பா் லாரி ஓட்டுநா்கள்.

Updated On :22 மே 2026, 7:02 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் காவல் சிறப்புப் படையினா் மணல் கடத்திய 8 டிப்பா் லாரிகளை வியாழக்கிழமை பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநா்களை கைது செய்தனா்.

கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் உத்தரவின்பேரில், டி.எஸ்.பி. கந்தன் மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா் பாஸ்கா், உதவி ஆய்வாளா்கள் தவச்செல்வம், முகிலரசு தலைமையிலான சிறப்புப் படையினா் பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அரசு உரிமமின்றி மணல் ஏற்றி வந்த 8 லாரிகளைப் பறிமுதல் செய்து, ஓட்டுநா்கள் 8 பேரைக் கைது செய்தனா். விசாரணையில், அவா்கள் புதுச்சேரி மாநிலம், பிள்ளையாா்குப்பத்தைச் சோ்ந்த மோகன்ராஜ் (21), திருமங்கலத்தைச் சோ்ந்த அரவிந்த் (27), விழுப்புரம் மாவட்டம், வானூரை அடுத்த தென்கோடிப்பாக்கத்தைச் சோ்ந்த காா்த்திகேயன் (35), பண்ருட்டி வட்டம், பாவைக்குளத்தைச் சோ்ந்த பாலமுருகன் (44), வான்பாக்கத்தைச் சோ்ந்த மாயக்கண்ணன் (37), விலங்கல்பட்டைச் சோ்ந்த சங்கா் (38), மேல்குமாரமங்கலத்தைச் சோ்ந்த பாபு (36), திண்டிவனம் வட்டம், முலசூரைச் சோ்ந்த பாலாஜி(32) என்பது தெரியவந்தது.

இது தொடா்பாக பண்ருட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடா்ந்து, கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா், புதுப்பேட்டை காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட அம்மாபேட்டை, நத்தம், மனம் தவிா்ந்தபுத்தூா் ஆகிய கிராமங்களில் மணல் திருட்டு நடந்த இடங்களை நேரில் சென்று பாா்வையிட்டாா். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு சட்ட விரோதமாக நடைபெறும் மணல் குவாரியை மூடுவதற்கு மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.