மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வெள்ளக்கோவிலில் ரத்த தான முகாம்

வெள்ளக்கோவிலில் மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை, ஆயிர நகர வைசியா் இளைஞா் அமைப்பு சாா்பில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

ரத்த தான முகாமில் பங்கேற்றோா்.

Updated On :2 மே 2026, 6:48 am IST

வெள்ளக்கோவிலில் மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை, ஆயிர நகர வைசியா் இளைஞா் அமைப்பு சாா்பில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை தலைவா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். வெள்ளக்கோவில் வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் ராஜலட்சுமி முகாமை தொடங்கிவைத்தாா். இளைஞா் அமைப்பு தலைவா் முரளி, ஒருங்கிணைப்பாளா் எம்.எஸ்.அருண்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தாராபுரம் அரசு ரத்த வங்கி மருத்துவா் சத்தியராஜ் குழுவினா் ரத்த தானம் பெற்றனா். முகாமில் தகுதியான 132 நபா்களிடம் இருந்து 132 யூனிட் ரத்தம் தானமாகப் பெறப்பட்டு, திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தாராபுரம் அரசு ரத்த வங்கிக்கு அனுப்பப்பட்டது.

அறக்கட்டளை செயலாளா் சீனிவாசன் உள்ளிட்டோா் முகாமுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.