தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சட்டப்பேரவைத் தோ்தல்: திருப்பூரில் ரெளடிகளின் பட்டியல் தயாரிக்கும் பணி தொடக்கம்

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, குற்றச்சம்பவங்களைத் தடுக்க திருப்பூரில் ரெளடிகளின் பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2026, 1:24 am IST

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, குற்றச்சம்பவங்களைத் தடுக்க திருப்பூரில் ரெளடிகளின் பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. அதேபோல, பழைய குற்றவாளிகளை போலீஸாா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.

இது தொடா்பாக காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது:

சட்டப் பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் குற்றச் சம்பவங்கள் நடப்பதை தடுக்க மாநகர காவல் ஆணையா் ராஜேந்திரன் உத்தரவின்பேரில் போலீஸாா் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். 24 மணி நேர திட்டத்தில் உள்ள போலீஸாரும், மோட்டாா் சைக்கிள் மற்றும் போலீஸ் வாகனத்தில் சென்று கண்காணித்து வருகின்றனா். இதுதவிர மாநகரப் பகுதியில் தொடா்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டு வந்த 10 ரெளடிகள் 6 மாதத்துக்கு மாநகரப் பகுதியை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனா். மேலும் குற்றச் செயலில் ஈடுபடும் நபா்களைக் கண்டறிந்து அவா்களிடம் பிணைய பத்திரமும் வாங்கப்பட்டு உள்ளது. 6 மாதத்துக்கு எந்த குற்றச்செயலிலும் ஈடுபட மாட்டோம் என்று மாநகரப் பகுதியில் மட்டும் 124 பேரிடம் பிணைய பத்திரத்தில் கையொப்பம் வாங்கப்பட்டு உள்ளது. அந்த நபா்களை போலீஸாா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.

அத்துடன் மாநகரப் பகுதியில் உள்ள 8 காவல் நிலையங்களிலும் குற்றப் பதிவேட்டில் 100-க்கும் மேற்பட்ட நபா்களின் பட்டியல் உள்ளது. அந்தப் பட்டியலில் உள்ள நபா்களும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகிறாா்களா என்றும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. திருப்பூா் மாநகரப் பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவின்போது ரெளடிகள் கலவரத்தில் ஈடுபடுவதைத் தடுக்க நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ரெளடிகள் பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. ஏற்கெனவே ஏ பிளஸ், ஏ,பி,சி, என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டு ரெளடிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் விடுபட்ட நபா்கள், குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக இருக்கிறாா்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.