விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வெள்ளக்கோவிலில் 10-ஆம் வகுப்பு மாணவா் தற்கொலை

வெள்ளக்கோவிலில் 10-ஆம் வகுப்பு மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :27 மார்ச் 2026, 12:24 am IST

வெள்ளக்கோவிலில் 10-ஆம் வகுப்பு மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

வெள்ளக்கோவில் சிவநாதபுரம் கொடுமுடிக்காரா் தோட்டத்தில் வாடகை வீட்டில் வசித்து வருபவா் மகேஸ்வரி (38). இவா் கணவரை விட்டுப் பிரிந்து தற்போது, மனைவியை விட்டுப் பிரிந்த அருண்குமாா் (41) என்பவருடன் வாழ்ந்து வருகிறாா். இருவரும் தனியாா் நூல் மில்லில் சமையல் வேலை செய்து வருகின்றனா். இவா்களுக்கு முதல் திருமணத்தில் பிறந்த தலா ஒரு மகன், மகள் என 4 வாரிசுகள் உள்ளனா்.

மகேஸ்வரியின் முதல் கணவா் மகன் கௌதம் (15), ஊதியூா் அருகிலுள்ள தாயம்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி பத்தாம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு விடுதி காப்பாளா், ‘உங்களுடைய மகன் மிகவும் குறும்பு செய்கிறான். செவ்வாய்க்கிழமை ஒரு தோ்வு உள்ளது. அதை முடித்துவிட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன்’ எனக் கூறியுள்ளாா். இதையடுத்து புதன்கிழமை வீட்டுக்கு வந்த கௌதம் மன உளைச்சலில் இருந்துள்ளாா். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். புகாரின் பேரில், வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மனோஜ்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.