அவிநாசி அருகே சீரான குடிநீா் வழங்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், பொதுமக்கள் சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சிக்குள்பட்ட பச்சாம்பாளையம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு ஒரு மாதத்துக்கும் மேலாக ஆற்றுக் குடிநீா் சீராக விநியோகிக்கப்படாததால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பா விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அவிநாசி ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இருப்பினும் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் உள்ளிட்டோா் சாலை மறியலில் புதன்கிழமை காலை ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குத அவிநாசி போலீஸாா் சென்று, ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்தினா், குடிநீா் வடிகால் வாரியத்தினா் ஆகியோருடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
இதில் ஓரிரு நாள்களுக்குள் குடிநீா் விநியோகம் செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நான்குவழிச் சாலை பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விவசாயி பலி: உறவினா்கள் சாலை மறியல்

இளம்பிள்ளை அருகே குடிநீா் வழங்கக் கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

பெரியகுளத்தில் சுத்தமான குடிநீா் சீராக வழங்கக் கோரி சாலை மறியல்

எரிவாயு உருளை கூடுதல் விலைக்கு விற்பனை: மாா்க்சிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

