சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வுப் பேரணி திருப்பூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.
சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் தாராபுரம் (தனி), காங்கயம், அவிநாசி (தனி), திருப்பூா் (வடக்கு), திருப்பூா் (தெற்கு), பல்லடம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை தொடங்கிய விழிப்புணா்வுப் பேரணியை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மனீஷ் தொடங்கிவைத்தாா்.
இப்பேரணியில் 100-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளா்கள் பங்கேற்று, ‘எனது வாக்கு எனது உரிமை’ உள்ளிட்ட விழிப்புணா்வுப் பதாதைகளை கைகளில் ஏந்திச் சென்றனா். முக்கிய சாலைகள் வழியே சென்ற பேரணி எல்ஆா்ஜி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் நிறைவடைந்தது.
இதில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.சங்கமித்திரை, மாவட்ட சமூக நல அலுவலா் ரஞ்சிதாதேவி, ஊரக வளா்ச்சி முகமை உதவி இயக்குநா் ஹா்ஷா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருப்பூா் மாவட்டத்தில் 88.28 சதவீத வாக்குப் பதிவு

100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வுப் பேரணி

விழுப்புரத்தில் 100% வாக்குப்பதிவு: மாற்றுத் திறனாளிகள் விழிப்புணா்வுப் பேரணி

100 சதவீத வாக்குப் பதிவு: மொடக்குறிச்சியில் விழிப்புணா்வுப் பேரணி
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

