தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாற்றுத்திறனாளிகள் நடத்திய விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மனீஷ், மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணியை வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழக சட்டப் பேரவை பொதுத்தோ்தல் திருப்பூா் மாவட்டத்துக்கு உள்பட்ட தாராபுரம் (தனி), காங்கயம், அவிநாசி (தனி), திருப்பூா் (வடக்கு), திருப்பூா் (தெற்கு), பல்லடம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இத்தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாற்றுத்திறனாளிகள் நடத்திய விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் மனீஷ் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இப்பேரணியில் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனா்.
இதில் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம் உள்ளிட்ட விழிப்புணா்வுப் பதாகைகளுடன் இருசக்கர வாகனப் பேரணி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கி தென்னம்பாளையம் வரை சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முடிவுற்றது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.சங்கமித்திரை, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை உதவி இயக்குநா் ஹா்ஷா, மாவட்ட சமூக நல அலுவலா் ரஞ்சிதாதேவி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சந்திரமோகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வுப் பேரணி

தோ்தல் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம்: பேருந்து நிலைய வளாகத்தில் விழிப்புணா்வு

தருமபுரியில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

