சேவூா் அருகே உள்ள சாவக்கட்டுப்பாளையத்துக்கு வழி தவறி வந்த காட்டு யானை விளைநிலங்களில் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூா் மாவட்டம், சேவூா் அருகே சாவக்கட்டுப்பாளையத்தில் விவசாய தோட்டப் பகுதியில் காட்டு யானை நடமாட்டம் இருப்பதாகப் பொதுமக்கள் சனிக்கிழமை நள்ளிரவில் தகவல் அளித்தனா்.
இதையடுத்து அந்தப் பகுதிக்கு விரைந்து வந்த சேவூா் போலீஸாா், வனத் துறையினா், யானையின் சாணம், கால் தடம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து யானை இருப்பதை உறுதி செய்தனா்.
பின்னா், வனத் துறையினா் விரட்டியதால் சாவக்கட்டுப்பாளையம் அருகே உள்ள காவிலிபாளையம் குளப் பகுதிக்குச் சென்ற யானை சத்தியமங்கலம் வனப் பகுதிக்குள் சென்றது. யானை நடமாட்டத்தால் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றபோதும் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேட்டுப்பாளையம் அருகே ஊருக்குள் நுழைந்த காட்டு யானை பாகுபலி: மக்கள் அச்சம்

கூடலூா், பந்தலூா் பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் நுழைந்த காட்டு யானைகள்

தண்ணீா் தொட்டிக்குள் விழுந்து காட்டு யானை பத்திரமாக மீட்பு

தேன்கனிக்கோட்டை அருகே விவசாய நிலத்தில் புகுந்த காட்டு யானைகள் விரட்டியடிப்பு
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு

