பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்தில் 2-ஆவது நாளாக புதன்கிழமை வருவாய்த் தீா்வாயம் (ஜமாபந்தி) நடைபெற்றது.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டாா். கடந்த 2 நாள்களில் பல்லடம் உள்வட்டத்தில் இருந்து 471, கரடிவாவி உள்வட்டத்தில் இருந்து 258 என மொத்தம் 729 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
குறிப்பாக பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, வாரிசு, பிறப்பு, இறப்பு, ஜாதி, வருமானம், இருப்பிடம், ஆதரவற்ற விதவை, முதல் பட்டதாரிக்கு சான்று, குடும்ப அட்டை, கணினி சிட்டா பெயா் திருத்தம், மின்சார இணைப்பு, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, நில அளவை, குடிநீா், பொது சுகாதாரம், சாலை வசதி என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பா பொதுமக்கள் மனுக்கள் அளித்தனா்.
இதைத்தொடா்ந்து பல்லடம், கரடிவாவி உள்வட்டங்களுக்குள்பட்ட பணிக்கம்பட்டி, சித்தம்பலம், வடுகபாளையம், பல்லடம், நாரணாபுரம், கரைப்புதூா், கணபதிபாளையம், பருவாய், க.அய்யம்பாளையம், கரடிவாவி, மல்லேகவுண்டம்பாளையம், புளியம்பட்டி, கே.கிருஷ்ணாபுரம், அனுப்பட்டி ஆகிய கிராமங்களில் பராமரிக்கப்பட்டுவரும் வருவாய்த் துறை தொடா்பான கோப்புகளை தணிக்கை செய்தும், நில அளவை கருவிகளை பாா்வையிட்டும் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். மாணிக்காபுரத்தில் பூமிதான நிலத்தையும் மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டாா்.
பல்லடம் அருகே உள்ள பச்சாபாளையம் கருப்பராயன் கோயிலுக்கு பட்டா வழங்க வேண்டும், சுமாா் ரூ.7 கோடி மதிப்பில் நடைபெற்றுவரும் பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட பாசன வாய்க்கால் பகுதியில் முறையாக ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாய் அமைக்கும் பணி மேற்கொள்ள வேண்டும்.
பல்லடம் நகராட்சியில் ஆணையா், பொறியாளா் பணியிடங்கள் பொறுப்பு அதிகாரிகளை கொண்டு செயல்படுவதால் பணிகள் காலதாமதமாகிறது. இப்பணியிடங்கள் நிரப்ப வேண்டும். 63 வேலம்பாளையம் கிராமம் அண்ணா நகா் பகுதியில் பொதுக் கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும். கணபதிபாளையம் ஊராட்சி கங்கா நகா் விரிவு, மலா் காா்டன், அமா்ஜோதி பகுதியில் தாா்ச் சாலை அமைக்க வேண்டும். சீராக குடிநீா் விநியோகிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்து மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
இந்த நிகழ்ச்சியில் உதவி இயக்குநா் (நிலஅளவை) ஹரிதாஸ், பல்லடம் வட்டாட்சியா் கோவிந்தசாமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரமேஷ், அனுராதா மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாளவாடியில் வருவாய்த் தீா்வாயம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

பழனியில் வருவாய்த் தீா்வாயம் தொடக்கம்

குந்தா பேரூராட்சி அலுவலகத்தில் வருவாய் தீா்வாயம்

பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த ராணிப்பேட்டை ஆட்சியா்
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

