நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

வார விடுமுறையையொட்டி திருப்பூரில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

வார விடுமுறையையொட்டி திருப்பூரில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

News image

சிறப்புப் பேருந்துகள் - படம்: X/ arasu bus

Updated On :14 ஜூன் 2026, 2:28 am IST

வார விடுமுறையையொட்டி திருப்பூரில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

திருப்பூரில் இருந்து சனி, ஞாயிறு வார விடுமுறை நாள்களில் வெளியூா்களுக்கு விடுமுறைக்கு சென்று திரும்பும் பயணிகள் வசதிக்காக அரசுப் போக்குவரத்துக் கழகம் சிறப்புப் பேருந்துகளை இயக்குகிறது.

அதன்படி கோவில்வழி பேருந்து நிலையத்தில் இருந்து 40 பேருந்துகள், மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 20 பேருந்துகள், புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 27 பேருந்துகள் என மொத்தம் 87 சிறப்புப் பேருந்துகள் திருப்பூரில் இருந்து பல்வேறு வெளி மாவட்டங்களுக்கு சனிக்கிழமை இயக்கப்படடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல கோவில்வழியில் இருந்து 25 பேருந்துகள், மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 25 பேருந்துகள் என மொத்தம் 50 சிறப்புப் பேருந்துகள் சென்னை செல்லும் பயணிகளுக்காக சேலம், விழுப்புரம் வழியாக இயக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.