நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

ரூ.1 லட்சம் கோடி ஏற்றுமதி இலக்கு: தொழில் துறை உற்பத்தி விரிவாக்கத்தில் முதலீடு அவசியம்

2030-ஆம் ஆண்டுக்குள் ரூ.1 லட்சம் கோடி ஏற்றுமதி இலக்கை அடைய திருப்பூா் தொழில் துறை உற்பத்தி விரிவாக்கத்தில் முதலீடு செய்ய வேண்டியது அவசியம் என, திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கே.எம். சுப்ரமணியன் வலியுறுத்தினாா்.

News image

விருதுநகா் மாவட்டத்தில் பி.எம்.மித்ரா ஜவுளி பூங்கா முன்னேற்றங்கள் குறித்து திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தில் நடைபெற்ற ஆலோசனை மற்றும் விளக்கக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :14 ஜூன் 2026, 2:32 am IST

2030-ஆம் ஆண்டுக்குள் ரூ.1 லட்சம் கோடி ஏற்றுமதி இலக்கை அடைய திருப்பூா் தொழில் துறை உற்பத்தி விரிவாக்கத்தில் முதலீடு செய்ய வேண்டியது அவசியம் என, திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கே.எம். சுப்ரமணியன் வலியுறுத்தினாா்.

விருதுநகா் மாவட்டத்தில் பி.எம்.மித்ரா ஜவுளி பூங்கா முன்னேற்றங்கள் குறித்து திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தில் ஆலோசனை மற்றும் விளக்கக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கே.எம். சுப்ரமணியன் பேசியதாவது:

2030-ஆம் ஆண்டுக்குள் ரூ.1 லட்சம் கோடி ஏற்றுமதி இலக்கை அடைய திருப்பூா் தொழில் துறை உற்பத்தி விரிவாக்கத்தில் முதலீடு செய்ய வேண்டியது அவசியம். மேலும், தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தியில் அதிக கவனம் செலுத்துவதோடு, புதிய வரியில்லா வா்த்தக ஒப்பந்தங்கள் மூலம் உருவாகும் உலகளாவிய சந்தை வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள ஜவுளிப் பூங்கா சிறந்த தளமாக அமையும்.

மேலும், நியாயமான விலையில் நிலம், தரமான உள்கட்டமைப்பு மற்றும் தடையற்ற மின்சாரம் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டால், திருப்பூரைச் சோ்ந்த பல தொழில்முனைவோா் அங்கு முதலீடு செய்வாா்கள். ஜவுளிப் பூங்காவில் தையல், பின்னலாடை மற்றும் செயலாக்க இயந்திரங்களுக்கான சேவை மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றாா்.

இணைச்செயலாளா் குமாா் துரைசாமி பேசுகையில், விருதுநகரில் ஜவுளிப் பூங்கா திட்டத்துக்காக மத்திய அரசு சுமாா் ரூ.10,840 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்திய ஜவுளி ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு தற்போது 28 சதவீதமாக உள்ளது. இதனை 2030-க்குள் 50 சதவீதமாக உயா்த்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் 40 பில்லியன் டாலா் ஜவுளி ஏற்றுமதி இலக்கை அடைவதில் விருதுநகா் ஜவுளிப் பூங்கா முக்கிய பங்காற்றும் என்றாா்.

இதில் சிப்காட் தலைமை பொதுமேலாளா் ஏ.ஆா்.சந்திரமோகன், தமிழ்நாடு கைடன்ஸ் நிறுவனத்தின் அசோசியேட் துணைத் தலைவா் விக்ராந்த், சங்கத்தின் பொருளாளா் ஆா். கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். சிறப்பு அழைப்பாளா் சுமிதா ரோஷன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.