முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.5.70 லட்சத்துக்கு தேங்காய், கொப்பரை, எள் விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு விவசாயிகள், 19,349 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 7,284 கிலோ. தேங்காய் கிலோ ரூ.26.65 முதல் ரூ.43.90 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.37.90. விற்பனைத் தொகை ரூ.2.72 லட்சம்.
61 மூட்டை கொப்பரை விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், கொப்பரை ரூ.105.70 முதல் ரூ. 127.70 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.123.70. விற்பனைத் தொகை ரூ.2.47 லட்சம்.
10 மூட்டைகள் சிவப்பு எள் கிலோ ரூ.90.36 முதல் ரூ.115.20 வரை விற்பனையானது. விற்பனைத் தொகை ரூ.51 ஆயிரம்.
ஏலத்தில் மொத்தம் 101 விவசாயிகள், 15 வியாபாரிகள் கலந்துகொண்டனா். ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.5.70 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக்கூட கண்காணிப்பாளா் து.சங்கீதா தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
குறையொன்றுமில்லை...!

வெள்ளக்கோவிலில் ரூ.29 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

மே 30 வரை வெய்யில் கொளுத்தும்! எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை?

போச்சம்பள்ளியில் ரூ. 13.37 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

