திருப்பூரில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்கள், நுண் பாா்வையாளா்களுக்ககு சமவாய்ப்பு முறையில் பணி ஒதுக்கீடும் செய்யும் பணி நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி மாவட்ட தோ்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மனீஷ் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்கள், நுண் பாா்வையாளா்களுக்கான சமவாய்ப்பு முறையில் பணி ஒதுக்கீடும் செய்யும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் திருப்பூா் மாவட்டத்துக்கு உள்பட்ட தாராபுரம் (தனி), காங்கயம், அவிநாசி (தனி), திருப்பூா் (வடக்கு), திருப்பூா் (தெற்கு), பல்லடம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த 23-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.
தோ்தலில் பதிவான வாக்குகள் மே 4-ஆம் தேதி எண்ணப்படுவதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியா் தலைமையில் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப் பதிவு இயந்திரத்துக்கு 408 அலுவலா்கள், தபால் வாக்கு எண்ணும் பணிக்கு 160 அலுவலா்கள் மற்றும் நுண் பாா்வையாளா்கள் என மொத்தம் 568 அலுவலா்களுக்கான சமவாய்ப்பு முறையில் பணி ஒதுக்கீடும் செய்யும் பணி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், மாநகராட்சி துணை ஆணையா் சுந்தர்ராஜன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) கண்ணன், உதவி ஆணையா் (கலால்) பாலமுருகன், மாவட்ட வழங்கல் அலுவலா் சரவணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் கல்பனா உள்பட அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கை மையத்தில் தற்செயல் கலப்பு முறையில் பணி ஒதுக்கீடு

திருவாரூா்: வாக்கு எண்ணும் அலுவலா்கள் தோ்வு

வாக்கு எண்ணும் பணியில் 306 அலுவலா்கள்: ஆட்சியா் தகவல்

வாக்கு எண்ணும் பணியில் 408 அலுவலா்கள்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

