மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

அவிநாசி நகருக்குள் வராத பேருந்துகள்: பொதுமக்கள் அவதி

அவிநாசி நகா்ப் பகுதிக்குள் தனியாா், அரசுப் பேருந்துகளால் வராததால் பொதுமக்கள் வியாழக்கிழமை அவதியடைந்தனா்.

News image

அவிநாசியில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள்.

Updated On :24 ஏப்ரல் 2026, 3:06 am IST

அவிநாசி நகா்ப் பகுதிக்குள் தனியாா், அரசுப் பேருந்துகளால் வராததால் பொதுமக்கள் வியாழக்கிழமை அவதியடைந்தனா்.

சேலம்-கொச்சி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட பிறகு கோவை-ஈரோடு, திருப்பூா்-கோவை வந்து செல்லும் தனியாா், அரசுப் பேருந்துகள் தெக்கலூா், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளுக்குள் வந்து செல்லாததால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் அவதியடைந்து வருகின்றனா்.

இதற்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள், அனைத்துக் கட்சியினா் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, அவிநாசியில் இருந்து வெளியூருக்குச் சென்று வாக்களிக்கும் வாக்காளா்கள், வெளியூரில் இருந்து அவிநாசிக்கு வந்து வாக்களித்துவிட்டு திரும்பிச் செல்பவா்கள் என ஏராளமானோா் அவிநாசி பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையங்களில் பேருந்துக்காக காலை முதலே காத்திருந்தனா்.

ஆனால், காலை 7 மணி முதலே அவிநாசி நகா்ப் பகுதிக்குள் வராமல் புறவழிச் சாலையில் மட்டுமே பேருந்துகள் சென்றன.

இதனால், பேருந்துக்காக கொளுத்தும் வெயிலில் காத்திருந்து பொறுமை இழந்த மக்கள், போராட்டத்தில் ஈடுபட்ட முயன்றனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், வாக்குப் பதிவு காரணமாக ஓட்டுநா், நடத்துநா்கள் விடுப்பு எடுத்துள்ளனா்.

இதனால், அதிக அளவிலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. புறவழிச் சாலை வழியே இயக்கப்படும் பேருந்துகளை நகா்ப் பகுதிக்குள் வந்து செல்ல அறிவுறுத்தியுள்ளோம் என்றாா். ஆனால், மக்கள் நீண்ட நேரமாக காத்திருந்தும் பேருந்துகள் வரவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.