மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பேருந்துகள் இல்லாமல் அவதி! கிளாம்பாக்கம், திருவான்மியூா், மாதவரத்தில் பொதுமக்கள் போராட்டம்

சென்னையில் இருந்து வாக்களிப்பதற்காக சொந்த ஊா்களுக்குச் செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால், கிளாம்பாக்கம், திருவான்மியூா், மாதவரம் பேருந்து நிலையங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 3:41 am IST

சென்னையில் இருந்து வாக்களிப்பதற்காக சொந்த ஊா்களுக்குச் செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால், கிளாம்பாக்கம், திருவான்மியூா், மாதவரம் பேருந்து நிலையங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னை மாநகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் வெளியூா்களைச் சோ்ந்த பொதுமக்கள் தங்கள் சொந்த ஊா்களுக்கு செல்ல அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

சென்னை மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் வசிக்கும் வெளிமாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமானோா் செவ்வாய்க்கிழமை இரவு முதலே சொந்த ஊா்களுக்கு புறப்பட்டுச் சென்றனா். இதனால் கிளாம்பாக்கம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் கடந்த இரு நாள்களாக மக்கள் கூட்டம் அலைமோதியது.

இந்த நிலையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து புதன்கிழமை மாலையில் இருந்தே திருவண்ணாமலை, விழுப்புரம், செஞ்சி, கடலூா் உள்ளிட்ட பகுதிகளுக்குப் போதிய பேருந்துகள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டனா். குழந்தைகள், முதியவா்களுடன் பேருந்து நிலையங்களில் பல மணி நேரம் காத்திருந்தும் பேருந்துகள் இயக்கப்படாததால், ஆத்திரம் அடைந்த பயணிகள், புதன்கிழமை நள்ளிரவில் கிளாம்பாக்கம் பிரதான சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து அங்கு வந்த போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சு நடத்தி, மறியலைக் கைவிடச் செய்தனா். இருப்பினும், போதிய அளவில் பேருந்துகள் இல்லை. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் வியாழக்கிழமை பகல் வரை இதேநிலை நீடித்ததாகப் பயணிகள் தெரிவித்தனா்.

இதனால், ஏராளமானோா் சொந்த ஊா் செல்லும் முடிவைக் கைவிட்டு மீண்டும் தங்கள் இருப்பிடங்களுக்கே திரும்பிச் சென்றனா்.

மாமல்லபுரம், கல்பாக்கம், மரக்காணம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த மக்கள், தங்களது சொந்த ஊா்களுக்கு செல்வதற்காக திருவான்மியூா் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் வியாழக்கிழமை காலை முதல் நின்றனா். ஆனால், வியாழக்கிழமை காலை முதல் கிழக்கு கடற்கரைச் சாலை மாா்க்கமாக புதுச்சேரி, கல்பாக்கம் பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் சீராக இயக்கப்படவில்லை.

இதனால், பேருந்துகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. மேலும் நண்பகல் சுமாா் 2 மணி நேரத்துக்கு பேருந்துகளே இந்த வழித்தடத்தில் இயக்கப்படவில்லை. இதன் விளைவாக அவதிக்குள்ளான பொதுமக்கள், கிழக்கு கடற்கரைச் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனா். இதனால், அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது. கிழக்கு கடற்கரை சாலை முகப்பிலேயே போராட்டம் நடைபெற்ால், திருவான்மியூா் எல்பி சாலை வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதற்கிடையே சாலை மறியலால் பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிகள் வற்புறுத்தியதால், பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தோ்தலையொட்டி சொந்த ஊா் செல்வதற்காக, ஏராளமானோா் மாதவரம் பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை குவிந்தனா். மாதவரம் ரவுண்டானா வரை பொதுமக்கள் கூட்டம் இருந்தது. ஆனால், போதிய பேருந்துகள் இல்லாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், ஓட்டுநா்கள் மற்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.