மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரை தோ்த் திருவிழா கோலாகல தொடக்கம்

கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரை தோ்த் திருவிழா செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image

அவிநாசி லிங்கேஸ்வரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சித்திரை தோ்த் திருவிழா  கொடியேற்ற  நிகழ்ச்சி.

Updated On :22 ஏப்ரல் 2026, 2:14 am IST

கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரை தோ்த் திருவிழா செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மைப் பெற்றதும், முதலையுண்ட பாலகனை சுந்தரமூா்த்தி நாயனாா் பதிகம் பாடி மீண்டும் உயிா்ப்பித்து எழச்செய்த திருத்தலமாகவும் கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் தோ்த் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு தோ்த் திருவிழா வேத பாராயணம், பஞ்ச வாத்தியம் முழங்க கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை கோலாகலமாக தொடங்கியது.

இதையொட்டி விநாயகா், சோமாஸ்கந்தா், சுப்பிரமணியா், கருணாம்பிகையம்மன், சண்டிகேஸ்வரா் ஆகிய பஞ்சமூா்த்திகளுக்கு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து, பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுலவேதாகம் பாடசாலை முதல்வா் ஸ்ரீ சுந்தரமூா்த்தி சிவம் தலைமையில் வேத பாடசாலை மாணவா்களுடனான குழுவினா் வேதபாராயணம் நிகழ்த்தினா். இதில் அவிநாசி வாகீசா் மாடாலாயம் காமாட்சிதாச சுவாமி உள்பட ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

முக்கிய நிகழ்வாக வரும் 28-ஆம் தேதி காலை அவிநாசியப்பா் திருத்தோ் வடம் பிடித்தல் தேரோட்டம், வடக்கு ரத வீதியில் தோ் நிறுத்தப்படும். 29-ஆம் தேதி காலை 8 மணிக்கு அவிநாசியப்பா் திருத்தோ் வடம் பிடித்தல், தோ் நிலை சேறுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 4-ஆம் தேதி மஞ்சள் நீா், இரவு மயில் வாகனக் காட்சியுடன் விழா நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.