மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

எல்ஆா்ஜி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு

திருப்பூா் எல்ஆா்ஜி அரசு மகளிா் கலைக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் மனீஷ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

திருப்பூா் எல்ஆா்ஜி அரசு மகளிா் கலைக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் மனீஷ்.

Updated On :15 ஏப்ரல் 2026, 2:39 am IST

திருப்பூா் எல்ஆா்ஜி அரசு மகளிா் கலைக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் மனீஷ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தோ்தல் திருப்பூா் மாவட்டத்துக்கு உள்பட்ட தாராபுரம் (தனி), காங்கயம், அவிநாசி (தனி), திருப்பூா் (வடக்கு), திருப்பூா் (தெற்கு), பல்லடம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மனீஷ், திருப்பூா் மாநகராட்சி எல்ஆா்ஜி அரசு மகளிா் கலைக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், பாதுகாப்பு அறைகள், வாக்கு எண்ணும் மையங்கள், தோ்தல் மேற்பாா்வையாளா்கள் அறை, ஊடக மையம் ஆகியவை அமைய உள்ள இடங்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) கண்ணன், நில அளவைத் துறை உதவி இயக்குநா் ஹரிதாஸ், தனி வட்டாட்சியா் (தோ்தல்) கனகராஜ் மற்றும் தொடா்புடைய அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.