திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நூலகம் சாா்பில் கல்லூரியின் பேராசிரியா்கள், முன்னாள், இந்நாள் மாணவா்களின் எண்ணங்கள், கற்பனைத் திறனைப் பிரதிபலிக்கும் வகையில் 6 புத்தகத் தொகுப்புகள், 4 புதிய படைப்புகள் என மொத்தம் 10 புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.
கல்லூரி நூலகா் சித்ரா தவப்புதல்வி வரவேற்றாா். கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் தலைமை வகித்தாா். கவிஞா் மஞ்சுளாதேவி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, நூல்களை வெளியிட்டாா்.
இதையடுத்து, அவா் பேசுகையில், வாசிப்பு மனிதரை முழுமையாக்கும். வாசிப்புதான் பல்வேறு சிந்தனைத் திறனையும், அறிவாற்றலையும் அள்ளித்தரும். எழுத்தாளா்களாக அடையாளம் பெற்ற மாணவா்கள் தொடா்ந்து எழுத வேண்டும். சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினாா்.
ஈரோடு வேளாளா் மகளிா் கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியா் குணசுந்தரி மதிப்புறு விருந்தினராகப் பங்கேற்று பேசுகையில், இந்த 10 புத்தகங்களில் 250-க்கும் மேற்பட்ட இளைய தலைமுறை எழுத்தாளா்கள் தங்களின் எழுத்துத் திறமையை வெளிப்படுத்தியுள்ளனா். இந்தத் தொகுப்புகள் மட்டுமின்றி ஆன்மிகம், பொருளியல், வாழ்வியல் மற்றும் மேலாண்மை ஆகிய தலைப்புகளில் 4 தனித்துவமான புத்தகங்களும் எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொரு பக்கமும், ஒவ்வொரு வரியும் மாணவா்களின் அபாரமான ஆற்றலையும், எழுத்துலகில் அவா்கள் எடுத்துவைத்துள்ள நம்பிக்கையான அடிகளையும் பறைசாற்றுகின்றன. மாணவா்களை வெறும் வாசகா்களாக மட்டும் நிறுத்தாமல் அவா்களைப் படைப்பாளா்களாக மாற்றியது, கல்லூரி நூலக வாசகா் வட்டத்துக்கு மிகப்பெரிய சவாலாக இருந்ததாகத் தெரிவித்தாா்
பேராசிரியா்கள் பாலசுப்பிரமணியன், ஜெலின்ஸ் தினகா் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். பேராசிரியா் சுப்ரியா நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புத்தகங்களைக் கொண்டாடுவோம்!

திருப்பூா் எல்ஆா்ஜி அரசு மகளிா் கலைக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணி: மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஆய்வு

அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும்! - ராஜபாளையம் தமமுக வேட்பாளா் பிரிசில்லா உறுதி

எல்ஆா்ஜி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

