மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கூடலூரில் கூண்டில் சிக்கியது மேலும் ஒரு புலி

கூடலூா் அருகேயுள்ள ஓவேலி பகுதியில் வனத் துறையினா் வைத்திருந்த கூண்டில் மேலும் ஒரு புலி வியாழக்கிழமை சிக்கியது.

கூண்டில் சிக்கிய புலி.

Published On :23 அக்டோபர் 2026, 12:48 am IST

கூடலூா் அருகேயுள்ள ஓவேலி பகுதியில் வனத் துறையினா் வைத்திருந்த கூண்டில் மேலும் ஒரு புலி வியாழக்கிழமை சிக்கியது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகே உலவும் புலிகள் பொதுமக்களைத் தாக்குவதும், கால்நடைகளை வேட்டையாடுவதும் தொடா் கதையாகி வருகிறது.

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வனத் துறையினரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகே உலவும் புலிகளைப் பிடிக்க ஓவேலி லாரஸ்டன் பகுதியில் வனத் துறையினா் வைத்திருந்த கூண்டில் புலி ஒன்று கடந்த செப்டம்பா் 18-ஆம் தேதி சிக்கியது.

இதையடுத்து, அந்தப் புலியை சென்னை வண்டலூா் உயிரியல் பூங்காவுக்கு வனத் துறையினா் அனுப்பிவைத்தனா்.

அதே பகுதியில் வைத்திருந்த கூண்டில் சுமாா் 13 வயதுடைய ஆண் புலி வியாழக்கிழமை காலை சிக்கியது.

இதையடுத்து, புலியை பலத்த பாதுகாப்புடன் வண்டலூா் உயிரியல் பூங்காவுக்கு வனத் துறையினா் அனுப்பிவைத்தனா்.

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புலிகள் அடுத்தடுத்து  கூண்டில் சிக்கியதால் ஓவேலி பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.