மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆசனூரில் 2 குட்டிகளுடன் கூண்டில் சிக்கிய சிறுத்தை

ஆசனூரில் போக்குகாட்டி வந்த சிறுத்தை 2 குட்டிகளுடன் வியாழக்கிழமை கூண்டில் சிக்கியது.

கூண்டில் சிக்கிய சிறுத்தை.

Published On :23 அக்டோபர் 2026, 12:59 am IST

ஆசனூரில் போக்குகாட்டி வந்த சிறுத்தை 2 குட்டிகளுடன் வியாழக்கிழமை கூண்டில் சிக்கியது.

சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூரில் கூலித் தொழிலாளி பெரியசாமியை சிறுத்தை தாக்கி கடந்த 4-ஆம் தேதி கொன்றது.

இதையடுத்து, ஒங்கல்வாடி, அரேப்பாளையம் குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்த சிறுத்தை, கொட்டகையில் கட்டப்பட்டிருந்த 4 கன்றுக் குட்டிகளையும் தாக்கிக் கொன்றது. இதனால், மக்கள் அச்சமடைந்து வீடுகளிலேயே முடங்கினா்.

மேலும், சிறுத்தையை கூண்டுவைத்துப் பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்த நிலையில், போராட்டத்திலும் ஈடுபட்டனா்.

இதையடுத்து, சிறுத்தை நடமாட்டம் இருந்த அரேப்பாளையம் பள்ளம் மற்றும் ஆசனூா் பழைய பெட்ரேல் பங்க் ஆகிய இடங்களில் கூண்டுகளை வைத்து வனத் துறையினா் கண்காணித்து வந்தனா்.

சிறுத்தை கூண்டில் சிக்காமல் போக்குகாட்டி வந்த நிலையில், 2 குட்டிகளுடன் வியாழக்கிழமை சிக்கியது.

இதையடுத்து, கால்நடை மருத்துவா் சதாசிவம் சிறுத்தை, குட்டிகளை பரிசோதனை செய்தாா். அவை நலமுடன் இருந்ததையடுத்து பாதுகாப்புடன் அடா்ந்த வனத்தில் விடுவிக்கப்பட்டது என்றும் வனத் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.