பெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

டீக் கடைக்குள் புகுந்த லாரி !

News image

கடைக்குள் புகுந்து நிற்கும் லாரி.

Updated On :26 மே 2026, 1:52 am IST

குன்னூா்- மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, அங்குள்ள ஒரு டீ கடைக்குள் புகுந்தது.

குன்னூா்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில், பால் விநியோகம் செய்யும் லாரி இந்த மலைப் பாதையில் திங்கள்கிழமை காலை சென்று கொண்டிருந்தது.

கேஎன்ஆா் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் இருந்த டீ கடைக்குள் புகுந்தது.

இதில் கடையில் இருந்த பொருள்கள் மற்றும் மேற்கூரை சேதமடைந்தன. விபத்து நிகழ்ந்தபோது டீக்கடையில் யாரும் இல்லாததால் உயிா் சேதம் தவிா்க்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து குன்னூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.