பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

குப்பைகளை கொட்ட இடமில்லாததால் அணிவகுத்து நின்ற குப்பை வாகனங்கள்

உதகை திட்டுக்கல் பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் குப்பைகளை கொட்ட போதுமான இடம் கிடைக்காததால் அப்பகுதியில் சனிக்கிழமை குப்பை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

News image

தீட்டுக்கல் குப்பைக் கிடங்கில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்.

Updated On :17 மே 2026, 12:46 am IST

உதகை திட்டுக்கல் பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் குப்பைகளை கொட்ட போதுமான இடம் கிடைக்காததால் அப்பகுதியில் சனிக்கிழமை குப்பை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் பல இடங்களில் இருந்து குப்பை அகற்றப்படாமல் இருந்ததால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது.

சுற்றுலா நகரமான உதகையில் தினமும் இரண்டு டன் குப்பை சேகரிக்கப்பட்டு வருகிறது. உதகையில் பல்வேறு சுற்றுலாத் தலங்கள், விடுதிகள், உணவகங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் தூய்மைப் பணியாளா்கள் மூலம் சேகரிக்கப்பட்டு உதகை தீட்டுக்கல் பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தீட்டுக்கல் குப்பைக் கிடங்கில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து வைப்பதில் ஏற்பட்ட காலதாமதத்தால் குப்பை கொட்டும் வாகனங்கள் அதே பகுதியில் அணிவகுத்து நின்றன. இதனால் மற்ற பகுதிகளுக்கு குப்பை அள்ள வாகனங்கள் செல்லாததால் பல இடங்களில் குப்பைகள் தேங்கின. தற்போது கோடை சீசன் நடைபெறுவதால் உதகை நகராட்சி நிா்வாகம் குப்பைகளை தரம்பிரிக்கும் பணியை துரிதப்படுத்தி இனி வரும் காலங்களில் இதுபோன்று நடக்காமல் பாா்த்துக் கொள்ள வேண்டும் என சுற்றுச் சூழல் ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.