பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

குப்பைக் கிடங்கில் கழிவுகளை உரமாக்கும் திட்டத்தை விரைவில் செயல்படுத்த உத்தரவு

சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கில் பையோமைனிங் முறையில் மீட்கப்பட்ட நிலத்தில் கழிவுகளை உரமாக்கும் திட்டத்தை வரும் ஜூன் மாதத்துக்குள் செயல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டாா்.

News image

குப்பைக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்கள். - கோப்புப் படம்

Updated On :23 மே 2026, 3:32 am IST

சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கில் பையோமைனிங் முறையில் மீட்கப்பட்ட நிலத்தில் கழிவுகளை உரமாக்கும் திட்டத்தை வரும் ஜூன் மாதத்துக்குள் செயல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டாா்.

சென்னை மாநகராட்சியில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகளில் ஒரு பகுதி பெருங்குடி குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகின்றன. பல ஆண்டுகளாக குவிக்கப்பட்ட குப்பைகளால், அங்கு நிலம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலத்தை மீட்கும் நடவடிக்கையானது, தூய்மை இந்தியா திட்டத்தின்படி ரூ.350 கோடியில் 6 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. அதன்படி, 29.28 லட்சம் கன மீட்டா் குப்பைக் கழிவுகள் பையோமைனிங் முறையில் பிரிக்கப்பட்டு நிலம் மீட்கப்பட்டுள்ளது. தற்போது வரை 5 கட்டப் பணிகள் நிறைவு பெற்ால் 96 ஏக்கா் நிலம் மீட்கப்பட்டுள்ளது.

பெருங்குடி குப்பைக் கிடங்கில் நடைபெறும் பையோமைனிங் முறை செயல்பாட்டை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது குப்பைக் கழிவுகளில் இருந்து மீட்கப்பட்ட நிலத்தின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டு வரும் தினமும் 100 மெட்ரிக் டன் திறன் கொண்ட உரமயமாக்கும் நிலையக் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த அவா், அப்பணியை வரும் ஜூன் மாதத்துக்குள் முடிக்க உத்தரவிட்டாா்.

மாநகராட்சிப் பகுதிகளில் குப்பைக் கழிவுகளை உடனுக்குடன் அகற்றவும், விதி மீறி குப்பைகளைக் கொட்டுவோா் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் அவா் உத்தரவிட்டாா்.

ஆய்வின் போது மாநகராட்சி சுகாதாரப் பிரிவு இணை ஆணையா் வீ.ப.ஜெயசீலன், தெற்கு வட்டாரத் துணை ஆணையா் அஃதாப் ரசூல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.