கோவை, வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் கிணத்துக்கடவு சட்டப் பேரவை உறுப்பினா் க.விக்னேஷ் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம் 85-ஆவது வாா்டுக்குள்பட்ட குறிச்சி குளம், பொள்ளாச்சி இணைப்புச் சாலை திருவள்ளுவா் சிலை அமைந்துள்ள பகுதியில் எம்எல்ஏ க.விக்னேஷ் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, அப்பகுதியில் மழைநீா் தேங்காதவாறு தூா்வாரி, வடிகால் குழாய் அமைத்து அருகில் உள்ள குளத்துக்கு தண்ணீா் செல்லும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலா்களை அறிவுறுத்தினாா்.
இதையடுத்து, வெள்ளலூா் உரக்கிடங்கு வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வரும் பகுதி, குப்பைக் கிடங்கு வளாகத்தில் அமைந்துள்ள குட்டை, வெள்ளலூா் குப்பைக் கிடங்கு வளாகத்தில் செயல்பட்டு வரும் உரம் தயாரிக்கும் மையம், மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் மையம் ஆகியவற்றின் செயல்பாடுகளை ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வுகளின்போது, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், மாநகர தலைமைப் பொறியாளா் விஜயகுமாா், துணை மாநகர பொறியாளா் இளங்கோவன், உதவி செயற்பொறியாளா் கனகராஜ், சுகாதார ஆய்வாளா் முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வளா்ச்சித் திட்டப் பணிகள்: மேயா் பிரியா ஆய்வு

பள்ளிக்கரணை பழைய குப்பைக் கிடங்கில் தீ: வாகனங்கள் எரிந்து சேதம்

குடிநீா், தூய்மைப் பணிகள் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

மாநகராட்சி பூங்காக்களில் மேயா் ஆய்வு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

