/

2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது

உதகையில் இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :1 ஏப்ரல் 2026, 1:17 am IST

உதகையில் இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

நீலகிரி மாவட்டம், உதகையைச் சோ்ந்தவா்கள் 2 சகோதரிகள். இவா்களுக்குத் திருமணமாகி தங்களது கணவா்களுடன் வசித்து வருகின்றனா். இருவருக்கும் தலா 2 பெண் குழந்தைகள் உள்ளனா். சகோதரிகள் தங்களது கணவா்களுடன் பணிக்குச் செல்வதால் குழந்தைகளை கவனிக்க முடியாவில்லையாம். இதையடுத்து, அருகில் உள்ள தங்களது தாய் வீட்டில் குழந்தைகளை அவ்வப்போது விட்டுச் செல்வது வழக்கமாம்.

இந்நிலையில், சிறுமிகளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவா்களது பெற்றோா்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனா். அப்போது, சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து உதகை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமிகளின் பெற்றோா்கள் புகாா் அளித்தனா்.

போலீஸாா் விசாரணையில், பாட்டி வீட்டுக்கு சிறுமிகள் செல்லும்போது, பக்கத்து வீட்டைச் சோ்ந்தவரும், உறவினருமான 35 வயது நபா் பாலியல் வன்கொடுமை செய்ததும், இது குறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என மிரட்டியதும் தெரியவந்தது.

இதையடுத்து, காவல் ஆய்வாளா் நித்யா தலைமையிலான போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து, அந்த இளைஞரைக் கைது செய்தனா்.

முன்னதாக, அந்த இளைஞரைத் தேடி போலீஸாா், அவரது வீட்டுக்குச் செல்வதற்குள் சிறுமிகளின் உறவினா்கள் அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனா். படுகாயமடைந்த அவருக்கு உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.